<$BlogRSDUrl$>

Monday, April 05, 2004

ஒரு புது பிராது 

கொஞ்ச நாளைக்கு முன்னால இந்துவுல ஒரு செய்தி பாத்தேன். எலங்கையோட மொரளி பந்து வீசறதுல சந்தேகம் இருக்குன்னு அவர ஆஸ்திரேலியாவுக்குக் கூட்டிட்டுப் போயி சோதன செய்யறாங்கன்னு. ( அதுவும் சட்டையெல்லாம் கழட்டி வச்சு வெறு மேல்ல சென்சாரெல்லா(ம்) ஒட்டி பந்து வீசச் சொல்லியிருக்கானுங்க)
MMurali
எனக்கு ஒரு விசயம் வெளங்க மாட்டங்குது , எப்பவும் ஆஸ்த்ரேலியாக் காரனுக்கு மட்டும் ஏன் மொரளி மேல சந்தேகம் வருது? ஏன்னா, ஆஸ்திரேலியாவோட வார்னேக்கு இருக்குற ஒரே போட்டி மொரளி மட்டுந்தான். யாரு வால்சு செஞ்ச சாதனைய முறியடிச்சு ஒலகத்துலயே அதிகம் விக்கட் எடுத்த பெருமயப் பெறப் போறாங்கன்னு இவங்க ரெண்டு பேருக்கு எடயில மட்டுந்தான் போட்டி. இந்த சமயத்துல மொரளி எப்படி 20க்கு மேல ஒரே டெஸ்டு சீரிசுல எடுத்தாருன்னு சந்தேகம் வந்துருக்காம்(இந்து, ஏப்ரல்-1). ஆனா வார்னே 20க்கு மேல எடுத்தா யாருக்கும் சந்தேகம் இல்லயாம். கருப்பா இருக்கறவன் சாதிச்சா சந்தேகம். வெள்ளயா இருக்கிறவன் விக்கட்டு எடுத்தா அது சாதன. கொஞ்ச நாள் முன்னால்ல இந்தியாக்காரனுக ஆஸ்திரேலியாவில 4 /6 அடிச்சப்பல்லாம் மூஞ்சிக்கு முன்னால வந்து ஆஸ்திரேலியாக்காரனுக திட்டுவானுக. அதெல்லாம் தப்பு இல்லியாம். ஆனா இர்பான் விக்கிட்டு எடுத்துட்டு கைதட்டி சிரிச்சது மட்டும் தப்புன்னு சொல்லி அந்தப் பய்யனுக்கு தண்டம் போட்டுட்டானுங்க. இதயெல்லாம் கேக்க நாதியில்லாமப் போயிடுச்சுன்னு நம்ம கட்டப் பஞ்சாயத்துல விவாதிச்சு மொரளி மேல எந்தத் தப்பு இல்லன்னும், ஆஸ்திரேலியாக் காரனுக திமுர அடக்கறதுக்கு சீக்கிரம் நாம ஏதானும் பண்ணனும்னு தீர்ப்புச் சொலறே(ன்).


Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?

Weblog Commenting and Trackback by HaloScan.com