Thursday, April 22, 2004
A-M
வர வர ஆப்பு எழுதறது புரிய மாட்டேங்குது. கொஞ்சம் புரியற மாதிரி ஆப்படிங்கய்யா. அமலாசிங் ரொம்ப நாள் கழிச்சு வீட்டுக்கு வந்துருக்காரு. தூசு தட்டி இனிமேல்தான் இவரு எழுத ஆரம்பிக்கணும். கிண்டல் களகட்டுது இங்க. சின்னப் புள்ளைங்களுக்கு கம்ப்யூட்டரு பத்திக் கத்துக் கொடுக்கறாரு பத்ரி. ரொம்ப நல்ல விசயம். நமக்கும் கொஞ்சம் கத்துக்குடுத்தா நம்ம பஞ்சாயத்துத் தீர்ப்பக் கம்ப்யூட்டருல குடுக்கலாம். தான் வச்சிருந்த புத்தகங்கள்ளாம் அழிஞ்சு போனதப்பத்தி ரொம்ப வருத்தப்படறாரு சந்திரவதனா. பூண்டெல்லாம் சாப்பிடலாம். ஆனா முத்தம் கொள்ள/கொடுக்க வயசாயிடுச்சே. மண்டபத்த எல்லாம் பிரிச்சுப்போட்டு மேஞ்சுருக்காரு கைகாட்டி. ரொம்ப கேள்வி கேட்டுத் தொந்தரவு கொடுத்ததுனால துடிமன்னனுக்கு சின்ன குடிச ஒண்ணக் கட்டிக் குடுத்துட்டாரு போல. மனுசன் அங்க போயும் கேள்வி கேட்டுக்கிடிருக்காரு. புதுசா வந்து சர்ச்சையக் கெளப்பறாரு ஈழநாதன். பொடா பத்தி இட்லியும் பெரபும் விவாதிக்கறாங்க. பழய காசு,ஸ்டாம்பு பத்தி நெறயச் சொல்றாரு பா.கண்ணன். வாக்காளர் பட்டியல்ல பேரு தேடிக்கிட்ருக்காரு கார்த்திகேயன். நானும் முயற்சி பண்ணுனேன் ஆனா எதோதோ சண்டப்போடுது(HTTP Error 404 - File or directory not found.) அப்புறம் மாவட்டம் வழியாப் போயி ரொம்பக் கஷ்டப்பட்டுக் கண்டு பிடிச்சுப் பாத்தா எனக்கு வயசு 18 ன்னு சொல்லுச்சு. எங்கண்ணனுக்கு எங்கப்பா கணவர்னும் சொல்லிச்சு. போங்கடா '.. கெட்டவனுங்களா' (ஒரு கெட்ட வார்த்தை) ன்னு வந்துட்டேன். யூனிகோடு பத்தி பச்சப் புள்ளக்கிச் சொல்றமாதிரி கதயாச் சொல்றாரு காசி. நல்லாருக்கு. எப்படி ஏவாரஞ் செய்யறதுன்னு மீனாக்சிசங்கர் தனியா பள்ளிக்கோடம் ஆரம்பிச்சிருக்காரு. ரொம்ப நல்லாருக்கு. ராதுகா-மிர் பதிப்பகம் பத்தியெல்லாஞ் சொல்லி ஆசயக் கெளப்பி விட்டாரு மெய்யப்பன். அடுத்தமொற ஊருக்குப் போனா செவப்புப் புத்தகம் நெறய வாங்கணும்.
மிச்சம் நாளக்கி......
மிச்சம் நாளக்கி......
Comments:
Post a Comment
