<$BlogRSDUrl$>

Saturday, April 10, 2004

A-Z 

வேதம் ஓதற வேதாள நந்திக்கு ஆப்படிச்சுட்டாங்க. ரஜினிக்கு ஆப்பு வச்சா உனக்கு ஆப்பு வக்கறோம்னு மெரட்றாங்க நெறயப் பேரு. பத்ரி லாஹூரு போயி கிரிக்கட்டுப் பாக்கறாரு. ஹரப்பால்லருந்து நமக்கு ஏதாவது வாங்கிட்டு வாய்யா. ஏய்யா இன்னமு(ம்) வெள்ள கருப்புன்னு பாக்கறீங்க, வெள்ளக்காரன்ட்டருந்து நல்ல விசயத்தக் கத்துக்கங்கய்யான்னு கோபபடறாங்க சந்திரவதனா. நமக்கு பயமாப் போச்சு, நாம எலங்க மொரளிக்குச் சப்போர்ட்டு பண்ணதப் பத்திக் கேள்விப்பட்டா நம்மயும் திட்டுவாங்களோன்னு. கருப்பு வெள்ளயப் பத்திச் சந்திரவதனா சொன்னதுக்கு எதிர்கொரல் கொடுக்கறாரு சு.பசுபதி . சித்தன் அப்பப்ப வர்றாரு, போறாரு. 'சித்த' நேரம் வீட்ல உக்காந்துட்டுப் போய்யா. தூர் வார்றேன் பேர்வழின்னு சொல்லி ஓடயப் பொரட்டிப் போட்டுட்டாரு கைகாட்டி. மண்ணுக்குள்ள கெடந்த நெறய பச்சக்கல்லுக வெளிய வந்து மின்னிக்கிட்டிருக்கு. எலக்சன்னுல நிக்கறவங்க நெலபுலம் நீச்சு பத்தியெல்லாம் தெரிஞ்சுக்கறதுக்கு வழி சொல்றாரு ஹரி. நல்ல, நாட்டுக்குத் தேவையான விசயம் எழுதறதுக்கு ஆளில்லைன்னு பிரபு கொற சொன்னதுக்கு ரோசம் வந்து பொருளாதாரம் பத்தி எழுத ஆரம்பிச்சுட்டாரு பெரகாசு.
நாமல்லாம் உருப்படாதவங்கன்னு சொல்லுது ஊசிப்போன இட்லி. உங்கள மாதிரி மனுசனுகள்ளாம் இருந்தா ஊர்ல எப்படி மழ பெய்யும்னு திட்றாரு ஜோதிராமலிங்கம். மழக்கி ஒதுங்கின எடத்துல தன் 'ஆள'ப் பாத்துருக்காரு நா.கண்ணன். ஏப்ரல் ஃபூல் பண்றவங்களப்பத்திச் சொல்றாரு பா.கண்ணன் . தமிழ்ல பொரகுராமு எழுத ஆசப்பட்டா இவருகிட்டக் கேளுங்க. பொரளியெல்லாம் நம்ப வேண்டாம்கறாரு காசி. (உங்க செல்போன்ல 809 க்கு போன் பேச ரெடியா?). மனுசனுக தோணி வளந்ததப்பத்திக் குருவிக சொல்லுதுக. சொல்ற விசயம் சரியான்னு பாத்துச் சொல்லுங்கங்கறாரு மெய்யப்பன். தமிழ் நாட்ல தற்கொல ஏன்னு அலசறாரு. மஞ்சள் சாப்பிட்டா புற்று நோய் வராதாமே. ஆவுடையார் கோயிலுக்கு இந்த வழியாப் போங்க. கண் பொரையப்பத்தித் தெரியணுமா, இராதாகிருஷ்ணன்ட்ட கேட்டுக்குங்க. பொறம்போக்கு பத்தித் தெரியணுமா, ரிக்சாக்காரங்கிட்ட கேளுங்க.
தங்கமணியோட தவளைக்கு சவப்பெட்டி செஞ்சு குடுக்கறாரு செல்வராசு.
இருக்குது ஆனா இல்லைன்னு புதுசா ஏதோ கொவாண்டம் தியரி சொல்றாரு சங்கரு. பொதுக்கூட்டத்துக்குப் போயி கலக்கிட்டுருக்காரு சுந்தரவடிவேலு. (காமராஜர் ஆட்சி மாதிரி ஒங்க ஆட்சிலதான் மக்கள் பொதுக்காரியத்தப் பத்தி யோசிக்கறாங்க...). எலக்சனுக்காக தனியா குடிச போட்ருக்காரு மாலன். (எலக்சன் முடிஞ்சதும் கலச்சிருவீங்களா?). குதிகால் வலியப்பத்தி இங்க தெரிஞ்சுக்குங்க. எலங்கத் தேர்தலப்பத்திச் சொல்றாரு திவாகரன்.
பிரசவத்தப்பத்தி ஒரு நல்ல கட்டுர இங்க இருக்குது. நெறய நல்ல விசயங்களப் படிச்சு எழுதிறாங்க சந்திரவதனா. ஆனா நம்ம கருத்துக்களச் சொல்ல கொஞ்சம் comments வழியா எடங் குடுத்தா நல்லா இருக்கும். பூண்டு சாப்பிடுங்கய்யா. ஒடம்புக்கு நல்லதாம். இணயத்துல வர்ற இதழ்களயல்லாம் தொகுக்கறாரு நக்கீரன்.
அப்பாடா ஒரு வழியா முடிஞ்சதப்பா நம்ம பஞ்சாயத்து. ஒரு வாரத்துக்கு நம்மால எந்திருக்க முடியாதுங்கோ.

Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?

Weblog Commenting and Trackback by HaloScan.com