<$BlogRSDUrl$>

Saturday, April 24, 2004

S-Z 

வக்கீலாகாம வாத்தியாரா ஆன கதயச் சொல்றாரு சபாநாயகம். குவாண்டம் பத்திய சங்கரோட பள்ளிக்கூடம் நல்லாப் போகுது. நாமளும் இது மாதிரி ஏதாவது பண்ணலாம்னு ஒரு யோசன இருக்கு. கொழந்தைங்க வரஞ்ச ஓவியமெல்லாம் காட்டி சந்தோசமாக்கறாரு செல்வராசு.

தோழர் கந்தர்வன் இறந்ததுக்கு வருந்தறாரு பி.கே.எஸ். நமக்கும் ரொம்ப வருத்தமாயிடுச்சு. அவரோட செவப்புக் கவிதைகள நான் படிச்சுருக்கேன். அந்த மாதிரி உயிரோட்டமா தொழிலாளர் பிரச்சினைய எழுதறவுங்க கொறஞ்சி போயிட்டாங்க.

தெரிஞ்சும் பதில் சொல்லலைன்னா தல வெடிச்சுடும்னு பயமுறுத்தறாரு சுந்தரவடிவேலு. கண்ணுவலிப் பூவுக்கு ஆதரவுக் கொரல் கொடுக்கறாரு.

வெய்யக்காலத்துல ஒழுங்காத் தண்ணி குடிக்கலன்னா ஒண்ணுக்குப் பிரச்சின வரும்னு சொல்றாரு சுரதா. தெனமும் வெங்காயத்தக் கடிச்சுக்கிட்டு கம்பஞ்சோத்த நீளமா கரச்சுக் குடிச்சா கல்லாவது, மண்ணாவது எல்லாம் அடிச்சுக்கிட்டுப் போயிரும்!!! (என்ன பண்றது இந்த எடுபட்ட பயலுங்க பசுமப் புரச்சி பண்றன்னு சொல்லி நம்ம கம்பு சோளத்தயல்லாம் ஒழிச்சுப்புட்டானுங்க. நாகரீகம் பெருத்துப் போயி அரிசியத் தின்னு சக்கர வந்து சாவறாங்க மக்கள், வெறும்அரிசியத்தின்னு சின்னப் புள்ளைங்கள்ளாம் நாலஞ்சு வயசிலயே கண்ணாடி மாட்டிக்கிட்டுத் திரியுதுங்க).

புத்தாண்டு வந்து/போயி நமக்கென்ன ஆச்சு, எதுவுமே மாறலயேங்குது தீட்சண்யன் கவித. பொறந்த தேதிய வச்சு காதல் சோசியம் சொல்றாரு திவாகரு. மழையில நனையனும்னா இங்க போங்க. அப்பா இல்லாமயே கொழந்த பொறக்கும்ங்கறாரு வெங்கட்டு.

அறிவியலுக்கு ஒரு கூட்டுக்கடை போட்ருக்காங்க. கணினி வச்சு பொருள் வடிவமைக்கிறது எப்படின்னு சொல்றாரு காசி. சுந்தர வடிவேலு செல்லப் பத்திச் சொல்றாரு. இந்தக் காலத்துப் புள்ளைங்கல்லாம் உருப்படாம போய்க்கிட்டிருக்காங்கன்னு புதுக் கொரல் கெளம்பிருக்கு.

(0) comments

Friday, April 23, 2004

N-R 

கம்ப்யூட்டரப் பத்திச் சின்ன சின்ன விசயங்களத் தெரிஞ்சுக்குங்க, இல்லைன்னா கண்டதெல்லாம் ரிப்பேருன்னு சொல்லிக் காசு புடுங்கீருவானுங்கன்னு எச்சரிக்கறாரு நவன்.

இந்து வெளியிடுற செய்திகளையெல்லாம் ஒப்பிட்டுப் பாத்துக் கிழிகிழின்னு கிழிக்கறாரு இரமணீதரன். எங்க ஆரம்பிக்கறாரு எங்க முடிக்கறாரு, எது இவரோட உணர்வு, எது இவர் எடுத்தாளர(refer) அடுத்தவங்களோட உணர்வுன்னு 'படக்'குன்னு தெரிய மாட்டங்குது. வீட்ட ஒழுங்கா கூட்டி, பெருக்கி, அடுக்கி வச்சாருன்னா இவர் போடற பாதி சண்ட கொறையும்ங்கறது நம்ம கருத்து.

ரொம்ப வெய்யிலா? இங்க போங்க குளிரெடுக்கும்!! பா.ரா புது வீட்டுக்குப் போயிட்டாரு. மரணதண்டனை இல்லைன்னா மக்கள் உருப்படமாட்டாங்கன்னு சொல்றாரு இராஜா. ஊனமுற்றவங்கள கிண்டல் செஞ்ச டிவிக்காரனுங்கள ஏன் யாரும் திட்டலைன்னு கேக்கறாரு கொசப்பேட்ட. நானும் கோபப்பட்டு கொரல் குடுத்துட்டு வந்தே(ன்).

மொகமூடி போட்டுக்கிட்டு எப்படி எழுதறதுன்னு சொல்லித்தர்றாரு கே.வி.ஆர். ஒரே ஜில்லா (proxy server) வழியா வேற வேற மரத்துக்கடி(PC) லருந்து பஞ்சாயத்துப் பாக்கற மூணு நாலு பேருக்கும் ஒரே IP தான் வரும். நான், கைகாட்டி, துடிமன்னன், கர்ணன் இவங்கள்ள யாராவது ஒருத்தருதான் இணையத்துல ஓட்டுப் போட முடியும். நான் வேகமா இராஜா வீட்டுக்கு ஓடிப் போயி மரண தணடன பாவமய்யான்னு ஓட்டுப் போட்டுட்டு வந்துட்டேன்னு வச்சுக்கங்க, அப்பறம் மத்த மூணு பேரும் என்ன பாச்சா பண்ணாலும் ஓட்டுப் போட முடியாது. திரும்ப ஓட்டுப் போட வந்திட்டீங்களான்னு தொரத்தி உட்டர்றாங்க. மரமே இல்லாம சும்மா ஓசில வந்து நண்பர்கள்(!?) யாராவது எங்கயாவது comment-ல ஏதாவது பஞ்சாயத்துப் பண்ணிட்டுப் போனாலும் நாங்கதான் மாட்டுவோம்!!!

நம்ம வேலய இன்னும் நல்லாச் செய்யலாமான்னு யோசிக்கறாரு இராம்கி. செய்யுங்க நமக்கும் சந்தோசந்தான்.
ஒரே பேர்ல நெறய பேரு பெருகியிருக்கிறதக் கண்டு பொறுமையில்லாம பொருமிப் பொலம்பி நீ நீதான், இவர் அவர்தான், அவர் இவர்தான்னு கொழம்பிக்கிடக்கறாரு டுபுக்கு. நமக்கும் கொழப்பந்தான்.
மிச்சப் பஞ்சாயத்து நாளக்கி.

(0) comments

Thursday, April 22, 2004

A-M 

வர வர ஆப்பு எழுதறது புரிய மாட்டேங்குது. கொஞ்சம் புரியற மாதிரி ஆப்படிங்கய்யா. அமலாசிங் ரொம்ப நாள் கழிச்சு வீட்டுக்கு வந்துருக்காரு. தூசு தட்டி இனிமேல்தான் இவரு எழுத ஆரம்பிக்கணும். கிண்டல் களகட்டுது இங்க. சின்னப் புள்ளைங்களுக்கு கம்ப்யூட்டரு பத்திக் கத்துக் கொடுக்கறாரு பத்ரி. ரொம்ப நல்ல விசயம். நமக்கும் கொஞ்சம் கத்துக்குடுத்தா நம்ம பஞ்சாயத்துத் தீர்ப்பக் கம்ப்யூட்டருல குடுக்கலாம். தான் வச்சிருந்த புத்தகங்கள்ளாம் அழிஞ்சு போனதப்பத்தி ரொம்ப வருத்தப்படறாரு சந்திரவதனா. பூண்டெல்லாம் சாப்பிடலாம். ஆனா முத்தம் கொள்ள/கொடுக்க வயசாயிடுச்சே. மண்டபத்த எல்லாம் பிரிச்சுப்போட்டு மேஞ்சுருக்காரு கைகாட்டி. ரொம்ப கேள்வி கேட்டுத் தொந்தரவு கொடுத்ததுனால துடிமன்னனுக்கு சின்ன குடிச ஒண்ணக் கட்டிக் குடுத்துட்டாரு போல. மனுசன் அங்க போயும் கேள்வி கேட்டுக்கிடிருக்காரு. புதுசா வந்து சர்ச்சையக் கெளப்பறாரு ஈழநாதன். பொடா பத்தி இட்லியும் பெரபும் விவாதிக்கறாங்க. பழய காசு,ஸ்டாம்பு பத்தி நெறயச் சொல்றாரு பா.கண்ணன். வாக்காளர் பட்டியல்ல பேரு தேடிக்கிட்ருக்காரு கார்த்திகேயன். நானும் முயற்சி பண்ணுனேன் ஆனா எதோதோ சண்டப்போடுது(HTTP Error 404 - File or directory not found.) அப்புறம் மாவட்டம் வழியாப் போயி ரொம்பக் கஷ்டப்பட்டுக் கண்டு பிடிச்சுப் பாத்தா எனக்கு வயசு 18 ன்னு சொல்லுச்சு. எங்கண்ணனுக்கு எங்கப்பா கணவர்னும் சொல்லிச்சு. போங்கடா '.. கெட்டவனுங்களா' (ஒரு கெட்ட வார்த்தை) ன்னு வந்துட்டேன். யூனிகோடு பத்தி பச்சப் புள்ளக்கிச் சொல்றமாதிரி கதயாச் சொல்றாரு காசி. நல்லாருக்கு. எப்படி ஏவாரஞ் செய்யறதுன்னு மீனாக்சிசங்கர் தனியா பள்ளிக்கோடம் ஆரம்பிச்சிருக்காரு. ரொம்ப நல்லாருக்கு. ராதுகா-மிர் பதிப்பகம் பத்தியெல்லாஞ் சொல்லி ஆசயக் கெளப்பி விட்டாரு மெய்யப்பன். அடுத்தமொற ஊருக்குப் போனா செவப்புப் புத்தகம் நெறய வாங்கணும்.
மிச்சம் நாளக்கி......

(0) comments

வந்துட்டேங்க 

நாம தூங்கி ஓய்வெடுத்தா யாரு கேக்கப் போறான்னு நெனச்சுப் படுத்துக்கிடந்தா, தூங்காதய்யா எந்திரிச்சு வேலயப் பாருன்னு மக்கள் எழுப்பிட்டாங்க. நாம தூங்குன நேரம் பாத்து நெறய பேரு புதுசா வந்து எழுதிக்கிட்டிருக்காங்க. பழய ஆளுங்க சில பேரு புது வீடு கட்டிக் குடி போயிருக்காங்க. எல்லாரயும் ஒரு எட்டி போய்ப்பாத்துட்டு சுடுதண்ணி* குடிச்சுட்டு வரலாம்ன்னு கெளம்பிட்டேன்.

*எங்க ஊர்ல காபித்தண்ணிய சுடுதண்ணின்னு சொல்லுவாங்க

(0) comments

Saturday, April 10, 2004

A-Z 

வேதம் ஓதற வேதாள நந்திக்கு ஆப்படிச்சுட்டாங்க. ரஜினிக்கு ஆப்பு வச்சா உனக்கு ஆப்பு வக்கறோம்னு மெரட்றாங்க நெறயப் பேரு. பத்ரி லாஹூரு போயி கிரிக்கட்டுப் பாக்கறாரு. ஹரப்பால்லருந்து நமக்கு ஏதாவது வாங்கிட்டு வாய்யா. ஏய்யா இன்னமு(ம்) வெள்ள கருப்புன்னு பாக்கறீங்க, வெள்ளக்காரன்ட்டருந்து நல்ல விசயத்தக் கத்துக்கங்கய்யான்னு கோபபடறாங்க சந்திரவதனா. நமக்கு பயமாப் போச்சு, நாம எலங்க மொரளிக்குச் சப்போர்ட்டு பண்ணதப் பத்திக் கேள்விப்பட்டா நம்மயும் திட்டுவாங்களோன்னு. கருப்பு வெள்ளயப் பத்திச் சந்திரவதனா சொன்னதுக்கு எதிர்கொரல் கொடுக்கறாரு சு.பசுபதி . சித்தன் அப்பப்ப வர்றாரு, போறாரு. 'சித்த' நேரம் வீட்ல உக்காந்துட்டுப் போய்யா. தூர் வார்றேன் பேர்வழின்னு சொல்லி ஓடயப் பொரட்டிப் போட்டுட்டாரு கைகாட்டி. மண்ணுக்குள்ள கெடந்த நெறய பச்சக்கல்லுக வெளிய வந்து மின்னிக்கிட்டிருக்கு. எலக்சன்னுல நிக்கறவங்க நெலபுலம் நீச்சு பத்தியெல்லாம் தெரிஞ்சுக்கறதுக்கு வழி சொல்றாரு ஹரி. நல்ல, நாட்டுக்குத் தேவையான விசயம் எழுதறதுக்கு ஆளில்லைன்னு பிரபு கொற சொன்னதுக்கு ரோசம் வந்து பொருளாதாரம் பத்தி எழுத ஆரம்பிச்சுட்டாரு பெரகாசு.
நாமல்லாம் உருப்படாதவங்கன்னு சொல்லுது ஊசிப்போன இட்லி. உங்கள மாதிரி மனுசனுகள்ளாம் இருந்தா ஊர்ல எப்படி மழ பெய்யும்னு திட்றாரு ஜோதிராமலிங்கம். மழக்கி ஒதுங்கின எடத்துல தன் 'ஆள'ப் பாத்துருக்காரு நா.கண்ணன். ஏப்ரல் ஃபூல் பண்றவங்களப்பத்திச் சொல்றாரு பா.கண்ணன் . தமிழ்ல பொரகுராமு எழுத ஆசப்பட்டா இவருகிட்டக் கேளுங்க. பொரளியெல்லாம் நம்ப வேண்டாம்கறாரு காசி. (உங்க செல்போன்ல 809 க்கு போன் பேச ரெடியா?). மனுசனுக தோணி வளந்ததப்பத்திக் குருவிக சொல்லுதுக. சொல்ற விசயம் சரியான்னு பாத்துச் சொல்லுங்கங்கறாரு மெய்யப்பன். தமிழ் நாட்ல தற்கொல ஏன்னு அலசறாரு. மஞ்சள் சாப்பிட்டா புற்று நோய் வராதாமே. ஆவுடையார் கோயிலுக்கு இந்த வழியாப் போங்க. கண் பொரையப்பத்தித் தெரியணுமா, இராதாகிருஷ்ணன்ட்ட கேட்டுக்குங்க. பொறம்போக்கு பத்தித் தெரியணுமா, ரிக்சாக்காரங்கிட்ட கேளுங்க.
தங்கமணியோட தவளைக்கு சவப்பெட்டி செஞ்சு குடுக்கறாரு செல்வராசு.
இருக்குது ஆனா இல்லைன்னு புதுசா ஏதோ கொவாண்டம் தியரி சொல்றாரு சங்கரு. பொதுக்கூட்டத்துக்குப் போயி கலக்கிட்டுருக்காரு சுந்தரவடிவேலு. (காமராஜர் ஆட்சி மாதிரி ஒங்க ஆட்சிலதான் மக்கள் பொதுக்காரியத்தப் பத்தி யோசிக்கறாங்க...). எலக்சனுக்காக தனியா குடிச போட்ருக்காரு மாலன். (எலக்சன் முடிஞ்சதும் கலச்சிருவீங்களா?). குதிகால் வலியப்பத்தி இங்க தெரிஞ்சுக்குங்க. எலங்கத் தேர்தலப்பத்திச் சொல்றாரு திவாகரன்.
பிரசவத்தப்பத்தி ஒரு நல்ல கட்டுர இங்க இருக்குது. நெறய நல்ல விசயங்களப் படிச்சு எழுதிறாங்க சந்திரவதனா. ஆனா நம்ம கருத்துக்களச் சொல்ல கொஞ்சம் comments வழியா எடங் குடுத்தா நல்லா இருக்கும். பூண்டு சாப்பிடுங்கய்யா. ஒடம்புக்கு நல்லதாம். இணயத்துல வர்ற இதழ்களயல்லாம் தொகுக்கறாரு நக்கீரன்.
அப்பாடா ஒரு வழியா முடிஞ்சதப்பா நம்ம பஞ்சாயத்து. ஒரு வாரத்துக்கு நம்மால எந்திருக்க முடியாதுங்கோ.

(0) comments

Friday, April 09, 2004

அடேங்கப்பா 

"ஓசனயெல்லா(ம்) நல்ல ஓசனதான், வண்டி மாடு ஜப்பு ஜாடா " ங்கறமாதிரி என்னோட யோசனை வேலைக்காவாது போல. போன பஞ்சாயத்துல சொன்ன மாதிரி
வாரத்துக்கு ஒருதடவயாவது எழுதறவங்க வீட்டுக்குப் போயிட்டு வரலாம்னு நெனச்சது எவ்வள்வு பெரிய தப்புன்னு இப்பத்தாங்க தெரியுது. நான் ஏதொ பதனஞ்சு இருவது பேரு எழுதுவாங்கன்னு நெனச்சா அறுவது பேருக்குப் பக்கமா எப்பவும் வீட்லயே ஏதாவது எழுதிகிட்ருக்காங்க. ம்ம்ம்ம் என்ன பண்றது, வாக்குக் குடுத்தா இந்த நாட்டாம தவற மாட்டான். அதுனால அறுவது பேர் வீட்டுக்கும் போயிப் பாக்க வேண்டியதுதான்.

(0) comments

Tuesday, April 06, 2004

கொஞ்சம் யோசனை 

கொஞ்ச நாளாவே ஒரு யோசன. எல்லா ஊட்டுக்கும் போயி ஒரு தடவ பாத்துட்டு வந்து எழுதறதுக்குள்ளயே மனுசனுக்கு தாவு தீந்து போச்சு. இதயே எத்தன நாளக்கிப் போயி படிச்சுட்டு வந்து சொல்ல முடியும்னு தெரியல. இதுனால நா ஒரு முடிவுக்கு வந்துட்டே(ன்). ஊட்டயல்லாம் அஞ்சு வகயா பிரிச்சுக்கலாம்னு முடிவு செஞ்சிருக்கே(ன்).
ஒண்ணு - வாரத்துல ஒரு தடவயாவது எட்டிப்பாத்து உருப்படியா ஏதாவது எழுதறவுங்க.
ரெண்டு - மாசத்துல ஒரு தடவயாவது எதாவது நல்லதா எழுதறவுங்க
மூணு - புதுசா வீடு கட்றவங்க
நாலு - வீட்டுக்கு வராம (ரெண்டு மூணு மாசத்துக்கு மேல) எங்கியாவது சுத்திகிட்டிருக்கறவங்க.
அஞ்சு - அடிக்கடி எழுதறவுங்க/எழுதாதவங்க , ஆனா பைசா பிரயோசனத்துக்கு ஆகாது

இதுல மொத ரெண்டு பேரு வீட்டுக்கு மட்டும் அடிக்கடி போயி நல்லது பொல்லா(த)து விசாரிச்சுட்டு வரலாம்னு இருக்கற(ன்).
மத்த மூணு பேருக்கும் என்னால ஒபயோகம் இல்லன்னாலும் ஒவுத்தரியம் இருக்காதுன்னு சொல்லிக்கறன்.

(0) comments

Monday, April 05, 2004

ஒரு புது பிராது 

கொஞ்ச நாளைக்கு முன்னால இந்துவுல ஒரு செய்தி பாத்தேன். எலங்கையோட மொரளி பந்து வீசறதுல சந்தேகம் இருக்குன்னு அவர ஆஸ்திரேலியாவுக்குக் கூட்டிட்டுப் போயி சோதன செய்யறாங்கன்னு. ( அதுவும் சட்டையெல்லாம் கழட்டி வச்சு வெறு மேல்ல சென்சாரெல்லா(ம்) ஒட்டி பந்து வீசச் சொல்லியிருக்கானுங்க)
MMurali
எனக்கு ஒரு விசயம் வெளங்க மாட்டங்குது , எப்பவும் ஆஸ்த்ரேலியாக் காரனுக்கு மட்டும் ஏன் மொரளி மேல சந்தேகம் வருது? ஏன்னா, ஆஸ்திரேலியாவோட வார்னேக்கு இருக்குற ஒரே போட்டி மொரளி மட்டுந்தான். யாரு வால்சு செஞ்ச சாதனைய முறியடிச்சு ஒலகத்துலயே அதிகம் விக்கட் எடுத்த பெருமயப் பெறப் போறாங்கன்னு இவங்க ரெண்டு பேருக்கு எடயில மட்டுந்தான் போட்டி. இந்த சமயத்துல மொரளி எப்படி 20க்கு மேல ஒரே டெஸ்டு சீரிசுல எடுத்தாருன்னு சந்தேகம் வந்துருக்காம்(இந்து, ஏப்ரல்-1). ஆனா வார்னே 20க்கு மேல எடுத்தா யாருக்கும் சந்தேகம் இல்லயாம். கருப்பா இருக்கறவன் சாதிச்சா சந்தேகம். வெள்ளயா இருக்கிறவன் விக்கட்டு எடுத்தா அது சாதன. கொஞ்ச நாள் முன்னால்ல இந்தியாக்காரனுக ஆஸ்திரேலியாவில 4 /6 அடிச்சப்பல்லாம் மூஞ்சிக்கு முன்னால வந்து ஆஸ்திரேலியாக்காரனுக திட்டுவானுக. அதெல்லாம் தப்பு இல்லியாம். ஆனா இர்பான் விக்கிட்டு எடுத்துட்டு கைதட்டி சிரிச்சது மட்டும் தப்புன்னு சொல்லி அந்தப் பய்யனுக்கு தண்டம் போட்டுட்டானுங்க. இதயெல்லாம் கேக்க நாதியில்லாமப் போயிடுச்சுன்னு நம்ம கட்டப் பஞ்சாயத்துல விவாதிச்சு மொரளி மேல எந்தத் தப்பு இல்லன்னும், ஆஸ்திரேலியாக் காரனுக திமுர அடக்கறதுக்கு சீக்கிரம் நாம ஏதானும் பண்ணனும்னு தீர்ப்புச் சொலறே(ன்).


(0) comments

Thursday, April 01, 2004

T-Z 

தங்கமணி நல்லா எழுதறாரு. சண்ட போடாதீங்கன்னு மதிக்கும், முருகனுக்கும் நல்ல அட்வைசு கொடுக்கறாரு. தீட்சண்யனோட கவிதக நல்லா இருக்கு. படிச்சா சுருசுருன்னு நமக்கே கோவம் வருது. அங்கங்க போயி நல்ல விசயத்தயல்லாம் சுட்டுகிட்டு வந்து சொல்றாரு திவாகரு. அவரே நெலா முற்றத்துல உட்கார்ந்துகிட்டு முன்னேற வழி சொல்றாரு. சக்கர வியாதியப் பத்தி சொல்றாங்க தென்றல்ல. ஆனா இப்ப ஏ(ன்) தென்றல் வீசறதில்ல? ஆன்மீகம் பத்தி நெறயப் படிக்கணும்னா இங்க போங்க. கொள்ளிடம் நல்லா இருக்கு , ஆனா காவிரி மாதிரி இப்ப மூணு நாலு மாசமா வறண்டு கெடக்கு. அறிவியலு செய்தி நெறய இருக்கு இங்க. புரிஞ்சா நமக்கும் கொஞ்சம் படிச்சுக் குடுங்க (சொல்லிக் குடுங்க). பரிசல ரொம்ப நா காயப் போடாதய்யா, வெய்யில்ல வெடாப்பு உட்ரும். கேள்வியல்லாம் கேக்கலாந்தான், இப்ப பதிலு எப்ப சொல்லுவீங்க? பொம்பளப் புள்ளைங்கல்லாம் சேந்து தோட்டம் போடறாங்க. போயிப் பாருங்க.

(0) comments

R-S 

ராதா நெறய வெவரத்த அலசறாரு. சச்சினுக்கு எரநூறு எடுக்க வாய்ப்புத் தரலைன்னு கோபப்படறாரு பாரா. கொசப்பேட்ட கொப்ஸாமி தூள் கெளப்புறாரு. தொடர்கத தொடரவே இல்ல. திண்ணயில சண்ட போடாதீங்கன்னு பஞ்சாயத்துச் செய்யறாரு ராஜ்மு. நகை போட்ற பொம்பளைங்கள உள்ள தள்ளணும்ங்கறாரு ராம்கி. செலந்தி நல்லா வல பின்னுது. சபாநாயகத்தோட நினைவுத் தடம் ரொம்ப நீளங்க. புதுசா வந்த சிவக்குமாரு மத்தவங்க பேசாததெல்லாம் நான் பேசுவேங்கறாரு. ஜனவரிக்கப்றம் சுபா தன்னோட மூணு வீட்டயும் உட்டுட்டுப் போயிட்டாரு. எப்ப வருவாருன்னு தெரியல. ரொம்ப அழகா எழுதுறாரு சுந்தரவடிவேலு. சுரதா நெறய வெசயம் சொல்றாரு. யூனிகொட்ல வீடு கட்றதெப்டின்னு சொல்றாரு. மருந்து குடுக்கறாரு பரியாரி.

(0) comments

This page is powered by Blogger. Isn't yours?

Weblog Commenting and Trackback by HaloScan.com