<$BlogRSDUrl$>

Monday, May 10, 2004

நாட்டாமை வெவசாயம் பாக்கப் போறாரு 

ரொம்ப நாளைக்கப்பறம் காடு கண்ணியல்லாம் மழ பேஞ்சுருக்குது. பொயி ஒழவோட்டி கம்பு சோளம் வெதச்சுட்டு வரலாம்னு கெளம்பிட்டேன். பருவத்தோட பயிர் செய்யணுமில்லயா? மழ பேஞ்சு அவனவன் தலைக்கு மேல வேலை வச்சுக்கிட்டு சுத்திக்கிட்டிருக்கறதுனால எவனும் எவன் மேலயும் பெராதும் கொடுக்கறதுல்ல. வேலையில்லைன்னாதான் பொறணி பேசிக்கிட்டுப் பிரச்சினைகளக் கொண்டு வருவானுங்க. அதனால நம்ம பஞ்சாயத்து கொஞ்ச நாளக்கி ஒத்தி வக்கப் படுது. போயிட்டு அப்பறமா வரட்டுமா?

(0) comments

Saturday, April 24, 2004

S-Z 

வக்கீலாகாம வாத்தியாரா ஆன கதயச் சொல்றாரு சபாநாயகம். குவாண்டம் பத்திய சங்கரோட பள்ளிக்கூடம் நல்லாப் போகுது. நாமளும் இது மாதிரி ஏதாவது பண்ணலாம்னு ஒரு யோசன இருக்கு. கொழந்தைங்க வரஞ்ச ஓவியமெல்லாம் காட்டி சந்தோசமாக்கறாரு செல்வராசு.

தோழர் கந்தர்வன் இறந்ததுக்கு வருந்தறாரு பி.கே.எஸ். நமக்கும் ரொம்ப வருத்தமாயிடுச்சு. அவரோட செவப்புக் கவிதைகள நான் படிச்சுருக்கேன். அந்த மாதிரி உயிரோட்டமா தொழிலாளர் பிரச்சினைய எழுதறவுங்க கொறஞ்சி போயிட்டாங்க.

தெரிஞ்சும் பதில் சொல்லலைன்னா தல வெடிச்சுடும்னு பயமுறுத்தறாரு சுந்தரவடிவேலு. கண்ணுவலிப் பூவுக்கு ஆதரவுக் கொரல் கொடுக்கறாரு.

வெய்யக்காலத்துல ஒழுங்காத் தண்ணி குடிக்கலன்னா ஒண்ணுக்குப் பிரச்சின வரும்னு சொல்றாரு சுரதா. தெனமும் வெங்காயத்தக் கடிச்சுக்கிட்டு கம்பஞ்சோத்த நீளமா கரச்சுக் குடிச்சா கல்லாவது, மண்ணாவது எல்லாம் அடிச்சுக்கிட்டுப் போயிரும்!!! (என்ன பண்றது இந்த எடுபட்ட பயலுங்க பசுமப் புரச்சி பண்றன்னு சொல்லி நம்ம கம்பு சோளத்தயல்லாம் ஒழிச்சுப்புட்டானுங்க. நாகரீகம் பெருத்துப் போயி அரிசியத் தின்னு சக்கர வந்து சாவறாங்க மக்கள், வெறும்அரிசியத்தின்னு சின்னப் புள்ளைங்கள்ளாம் நாலஞ்சு வயசிலயே கண்ணாடி மாட்டிக்கிட்டுத் திரியுதுங்க).

புத்தாண்டு வந்து/போயி நமக்கென்ன ஆச்சு, எதுவுமே மாறலயேங்குது தீட்சண்யன் கவித. பொறந்த தேதிய வச்சு காதல் சோசியம் சொல்றாரு திவாகரு. மழையில நனையனும்னா இங்க போங்க. அப்பா இல்லாமயே கொழந்த பொறக்கும்ங்கறாரு வெங்கட்டு.

அறிவியலுக்கு ஒரு கூட்டுக்கடை போட்ருக்காங்க. கணினி வச்சு பொருள் வடிவமைக்கிறது எப்படின்னு சொல்றாரு காசி. சுந்தர வடிவேலு செல்லப் பத்திச் சொல்றாரு. இந்தக் காலத்துப் புள்ளைங்கல்லாம் உருப்படாம போய்க்கிட்டிருக்காங்கன்னு புதுக் கொரல் கெளம்பிருக்கு.

(0) comments

Friday, April 23, 2004

N-R 

கம்ப்யூட்டரப் பத்திச் சின்ன சின்ன விசயங்களத் தெரிஞ்சுக்குங்க, இல்லைன்னா கண்டதெல்லாம் ரிப்பேருன்னு சொல்லிக் காசு புடுங்கீருவானுங்கன்னு எச்சரிக்கறாரு நவன்.

இந்து வெளியிடுற செய்திகளையெல்லாம் ஒப்பிட்டுப் பாத்துக் கிழிகிழின்னு கிழிக்கறாரு இரமணீதரன். எங்க ஆரம்பிக்கறாரு எங்க முடிக்கறாரு, எது இவரோட உணர்வு, எது இவர் எடுத்தாளர(refer) அடுத்தவங்களோட உணர்வுன்னு 'படக்'குன்னு தெரிய மாட்டங்குது. வீட்ட ஒழுங்கா கூட்டி, பெருக்கி, அடுக்கி வச்சாருன்னா இவர் போடற பாதி சண்ட கொறையும்ங்கறது நம்ம கருத்து.

ரொம்ப வெய்யிலா? இங்க போங்க குளிரெடுக்கும்!! பா.ரா புது வீட்டுக்குப் போயிட்டாரு. மரணதண்டனை இல்லைன்னா மக்கள் உருப்படமாட்டாங்கன்னு சொல்றாரு இராஜா. ஊனமுற்றவங்கள கிண்டல் செஞ்ச டிவிக்காரனுங்கள ஏன் யாரும் திட்டலைன்னு கேக்கறாரு கொசப்பேட்ட. நானும் கோபப்பட்டு கொரல் குடுத்துட்டு வந்தே(ன்).

மொகமூடி போட்டுக்கிட்டு எப்படி எழுதறதுன்னு சொல்லித்தர்றாரு கே.வி.ஆர். ஒரே ஜில்லா (proxy server) வழியா வேற வேற மரத்துக்கடி(PC) லருந்து பஞ்சாயத்துப் பாக்கற மூணு நாலு பேருக்கும் ஒரே IP தான் வரும். நான், கைகாட்டி, துடிமன்னன், கர்ணன் இவங்கள்ள யாராவது ஒருத்தருதான் இணையத்துல ஓட்டுப் போட முடியும். நான் வேகமா இராஜா வீட்டுக்கு ஓடிப் போயி மரண தணடன பாவமய்யான்னு ஓட்டுப் போட்டுட்டு வந்துட்டேன்னு வச்சுக்கங்க, அப்பறம் மத்த மூணு பேரும் என்ன பாச்சா பண்ணாலும் ஓட்டுப் போட முடியாது. திரும்ப ஓட்டுப் போட வந்திட்டீங்களான்னு தொரத்தி உட்டர்றாங்க. மரமே இல்லாம சும்மா ஓசில வந்து நண்பர்கள்(!?) யாராவது எங்கயாவது comment-ல ஏதாவது பஞ்சாயத்துப் பண்ணிட்டுப் போனாலும் நாங்கதான் மாட்டுவோம்!!!

நம்ம வேலய இன்னும் நல்லாச் செய்யலாமான்னு யோசிக்கறாரு இராம்கி. செய்யுங்க நமக்கும் சந்தோசந்தான்.
ஒரே பேர்ல நெறய பேரு பெருகியிருக்கிறதக் கண்டு பொறுமையில்லாம பொருமிப் பொலம்பி நீ நீதான், இவர் அவர்தான், அவர் இவர்தான்னு கொழம்பிக்கிடக்கறாரு டுபுக்கு. நமக்கும் கொழப்பந்தான்.
மிச்சப் பஞ்சாயத்து நாளக்கி.

(0) comments

Thursday, April 22, 2004

A-M 

வர வர ஆப்பு எழுதறது புரிய மாட்டேங்குது. கொஞ்சம் புரியற மாதிரி ஆப்படிங்கய்யா. அமலாசிங் ரொம்ப நாள் கழிச்சு வீட்டுக்கு வந்துருக்காரு. தூசு தட்டி இனிமேல்தான் இவரு எழுத ஆரம்பிக்கணும். கிண்டல் களகட்டுது இங்க. சின்னப் புள்ளைங்களுக்கு கம்ப்யூட்டரு பத்திக் கத்துக் கொடுக்கறாரு பத்ரி. ரொம்ப நல்ல விசயம். நமக்கும் கொஞ்சம் கத்துக்குடுத்தா நம்ம பஞ்சாயத்துத் தீர்ப்பக் கம்ப்யூட்டருல குடுக்கலாம். தான் வச்சிருந்த புத்தகங்கள்ளாம் அழிஞ்சு போனதப்பத்தி ரொம்ப வருத்தப்படறாரு சந்திரவதனா. பூண்டெல்லாம் சாப்பிடலாம். ஆனா முத்தம் கொள்ள/கொடுக்க வயசாயிடுச்சே. மண்டபத்த எல்லாம் பிரிச்சுப்போட்டு மேஞ்சுருக்காரு கைகாட்டி. ரொம்ப கேள்வி கேட்டுத் தொந்தரவு கொடுத்ததுனால துடிமன்னனுக்கு சின்ன குடிச ஒண்ணக் கட்டிக் குடுத்துட்டாரு போல. மனுசன் அங்க போயும் கேள்வி கேட்டுக்கிடிருக்காரு. புதுசா வந்து சர்ச்சையக் கெளப்பறாரு ஈழநாதன். பொடா பத்தி இட்லியும் பெரபும் விவாதிக்கறாங்க. பழய காசு,ஸ்டாம்பு பத்தி நெறயச் சொல்றாரு பா.கண்ணன். வாக்காளர் பட்டியல்ல பேரு தேடிக்கிட்ருக்காரு கார்த்திகேயன். நானும் முயற்சி பண்ணுனேன் ஆனா எதோதோ சண்டப்போடுது(HTTP Error 404 - File or directory not found.) அப்புறம் மாவட்டம் வழியாப் போயி ரொம்பக் கஷ்டப்பட்டுக் கண்டு பிடிச்சுப் பாத்தா எனக்கு வயசு 18 ன்னு சொல்லுச்சு. எங்கண்ணனுக்கு எங்கப்பா கணவர்னும் சொல்லிச்சு. போங்கடா '.. கெட்டவனுங்களா' (ஒரு கெட்ட வார்த்தை) ன்னு வந்துட்டேன். யூனிகோடு பத்தி பச்சப் புள்ளக்கிச் சொல்றமாதிரி கதயாச் சொல்றாரு காசி. நல்லாருக்கு. எப்படி ஏவாரஞ் செய்யறதுன்னு மீனாக்சிசங்கர் தனியா பள்ளிக்கோடம் ஆரம்பிச்சிருக்காரு. ரொம்ப நல்லாருக்கு. ராதுகா-மிர் பதிப்பகம் பத்தியெல்லாஞ் சொல்லி ஆசயக் கெளப்பி விட்டாரு மெய்யப்பன். அடுத்தமொற ஊருக்குப் போனா செவப்புப் புத்தகம் நெறய வாங்கணும்.
மிச்சம் நாளக்கி......

(0) comments

வந்துட்டேங்க 

நாம தூங்கி ஓய்வெடுத்தா யாரு கேக்கப் போறான்னு நெனச்சுப் படுத்துக்கிடந்தா, தூங்காதய்யா எந்திரிச்சு வேலயப் பாருன்னு மக்கள் எழுப்பிட்டாங்க. நாம தூங்குன நேரம் பாத்து நெறய பேரு புதுசா வந்து எழுதிக்கிட்டிருக்காங்க. பழய ஆளுங்க சில பேரு புது வீடு கட்டிக் குடி போயிருக்காங்க. எல்லாரயும் ஒரு எட்டி போய்ப்பாத்துட்டு சுடுதண்ணி* குடிச்சுட்டு வரலாம்ன்னு கெளம்பிட்டேன்.

*எங்க ஊர்ல காபித்தண்ணிய சுடுதண்ணின்னு சொல்லுவாங்க

(0) comments

This page is powered by Blogger. Isn't yours?

Weblog Commenting and Trackback by HaloScan.com