<$BlogRSDUrl$>

Wednesday, March 31, 2004

L-P 

மணி, மாலன் ரெண்டு பேரும் எழுதி ரொம்ப நாளாச்சு. மதி மல்லுக்கு நிக்கிறாரு முருகனோட. மீனாக்ஸ் நெறய சினிமா பாக்கறாரு. மெய்யப்பனோட சேந்து வா(ய்)க்கா வரப்பெல்லாம் சுத்திட்டு வாங்க. முல்லை குறிஞ்சியெல்லாம் பூத்து ரொம்ப நாளாச்சு. திருக்குறள் சீக்கிரம் வருதுண்ணாங்க காணா(ம்). நளாயினி எங்க போனாரோ தெரியல. நெறயா இங்லீஸ் புத்தகம் படிச்சுகிட்டிருக்கிறாரு நவன். பரி நெறய கத சொல்றாரு. ஊர் சுத்திகிட்ருக்காரு பவித்ரா. பேரின்பத்தோட பாட்டெல்லாம் சிற்றின்பமா இருக்கு. பள்ளிக்கூடமெல்லாம் மாத்தனும்கறாரு பிரதீப்பு. ஏவாரி ஆவணும்னு நெனக்கறவங்க பத்ரியோட சேத்து பெரகாசுகிட்டயும் ஐடியா கேளுங்க. கொழந் தப் புள்ளைங்களுக்குக் கத சொல்றாரு பிரேமு.

(0) comments

J-K 

ஜோதி மூணு ஊடு கட்டி ஒண்ணுலதான் குடியிருக்காரு. நா.கண்ணன் நாலு ஊடு கட்டி வச்சிருக்காரு. சங்கீதமெல்லாம் தெரியாதுன்னு வந்துட்டேன். ஜாக்ரதையா பின்னால வாங்கங்றாரு பா.கண்ணன
காதல்ல உருகறாரு பரணீ
கார்த்திக்கு புதுசா வந்துருக்காரு.
கருணாகரமூர்த்திய டிசம்பருக்கப்பறம் காணா(ம்). நேரம் ஒதுக்கி கடல்ல போயி குளிச்சிட்டு வாங்க.
குருவி பொறுக்கற மாதிரி தேடித் தேடி அறிவியலைச் சொல்றாங்க. குமரேசனோட ஒணர்வுகளப் படிங்க.

(0) comments

Tuesday, March 30, 2004

D-I 

ஓடையில தண்ணி குடிச்சா சுவையா இருக்கு. நெறய பழய மூட்டை வெச்சிருக்காங்க நேரங் கெடச்சாப் பொரட்டிப் பாக்கலாம். எளங்கோ நல்லா கவிதை எழுதறாரு. ஆனா நாலஞ்சு மாசமா போட்டது போட்டபடிக்குக் கெடக்குது. எங்க போயிட்டாருன்னு தெரியல. எழிலு புதுசா வந்துருக்காரு. ஞானி நந்தன் வீடு ரொம்ப இருட்டா இருக்கு.
மர நெழல்ல கொஞ்ச நேரம் எளப்பாறிட்டு வாங்க. புள்ளயார் சுழியோட நிக்கிது ஹரியோட எண்ணங்கள்.
பொலம்பணும்னா இங்க போயிட்டு வாங்க. ஹரி கிருஷ்ணன் ஏ(ன்) வெண்பா கத்துக்குடுக்கறத நிறுத்துனார்னு தெரியல. இட்லி,வடயோட இங்க களகட்டுது சிரிப்பு விருந்து, போயி சாப்புட்டுப் பாருங்க. மரபுக் கவிதை எழுதிக்கிட்டிருக்காரு இராமகிருஷ்ணன். என்ன கொஞ்சம் சுத்தி வளச்சுத்தான் இவுரு தோட்டத்துக்குப் போவ முடியுது.

(0) comments

C 

சந்திரா எழுதி ரொம்ப நாளாச்சு. என் வீட்லர்ந்து எத எடுத்தாலும் சொல்லிட்டு எடுங்கன்னு மிரட்டறாரு சந்திரலேகா.
ஒண்ணுல்ல ரெண்டுல்ல, ஏழு வீடு கட்டி அடிக்கறாரு சந்திரவதனா. உங்ககிட்ட நெறய நேரமும் பொறுமையும் இருந்தா போய்ப்பாருங்க. நெறய விசயம் தெரிஞ்சுக்கலாம்.
கூகிள்ள தேடறதப் பத்திச் சொன்ன செரலாதனத் தேடனும்.
சித்தன் பேச்சக் கேட்டா சுருசுருன்னு கோபம் வருது எலங்க அரசாங்கத்து மேல.

(0) comments

B 

இனிமே ஏவாரி ஆவனுமுனா எதுக்கும் பத்ரிகிட்ட கொஞ்சம் எலுப்பு (help) வாங்கிக்கலாங்க. எலக்சன்ல எந்தக் கச்சி ஜெயிக்குமுன்னு ஜோசியம் பாருங்க.
பாலாஜி இங்கிலீசுல பூக்கட்றதுனால அந்தப்பக்கம் தலை வெச்சுப் படுக்கறதில்லன்னு வந் துட்டே(ன்).
பாரி புரச்சி செஞ்ச புள்ளைங்களப் பத்தி எழுதறாரு. ஜனவரிக்கப்புறம் பாலமுருகன் வீட்ட விட்டு போயிட்டாரு. அவர் வீட்லருந்த வாச்சு ( counter clock) மாதிரி நானும் என் வீட்டுக்கு ஒண்ணு வாங்கலாம்னு நெனைக்கிறேன்.
சுப்பரமணி நல்லா எழுதறாரு. ஆனா ஒரு மாசமா ஆள் எங்க போனாருன்னு தெரியல.
செரி போயி கஞ்சி குடிச்சுட்டு வாங்க அப்பறம் பேசலாம்.

(0) comments

 

மொதமொதல்ல ஆரம்பிக்கும்போது ஆனா,ஆவன்னாவுலருந் து ஆரம்பிக்கலாம்.
ஆனைச்சாத்தான் செடிய நட்டுட்டுத் தண்ணி ஊத்தாம எங்கியோ போயிட்டாரு. தெறந் ததுமே 'ஆப்பு அடிக்கப் போறோம்' நு போர்டு போட்டிருக்கிறதுனாலே நமக்கும் ஆப்பு அடிச்சிட்டா என்ன பண்றதுன்னு பயத்துல ஓடியாந் துட்டேன். அபிதீன் பூவைப் பாக்கப்போனா அது எங்கெங்கயோ இழுத்துட்டுப் போயி தலை சுத்திடுச்சு.
அமலா சிங் அடிக்கடி இங்கிலீசுல சொல்றது நம்ம மாதிரி கைநாட்டுப் பயலுக்குப் புரிய மாட்டிங்குது. இவர் ரெண்டாவது வீடு கட்டி அதத் தூசி கூடத் தட்டாம வெச்சிருக்காரு.
அரவிந் தன் புதுசா செடி நடுக்கிட்டுருக்காரு.
ரஜினிக்கு ஒட்டுப் போடுவேங்கறாரு அருண்.
தாகம் அதிகமாயிடுச்சு. நா கொஞ்சம் தண்ணி (?) குடிச்சிட்டு வர்றேன்

(0) comments

Monday, March 29, 2004

தண்டோரா 

இதனால் சகல (வலைப்)பூ சுத்திகளுக்கு அறிவிக்கிறது என்னன்னா, நம்ம பயலுக/புள்ளைங்க சுத்துற பூவையெல்லாம் அப்பப்ப மோந்து பாத்து வாசமடிக்குதா, இல்லை நாத்தமடிக்குதான்னு சொல்லலாம்னு ஒரு யோசனை. இதனால எல்லாரும் புதுசா பூ சுத்தும்போதெல்லா(ம்) இந்த தண்டோராவோட comments-ல வந்து ஒரு குறிப்பப் போட்டா அவங்க சுத்தற பூவையெல்லாம் மோந்து பாத்து தீர்ப்பு சொல்லுவோம். இது இந்த பதினெட்டுப்பட்டி நாட்டாமையோட தீர்ப்பு.

(0) comments

This page is powered by Blogger. Isn't yours?

Weblog Commenting and Trackback by HaloScan.com